NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


ஆகரபதன மற்றும் கொடகலை ESPS நிலுவைத் தொகையினைச் செலுத்தி முடித்துள்ளது.

லங்கெம் நிறுவனத்தின் கீழ் தொழிற்படும் ஆகரபதன மற்றும் கொடகலை பெருந்தோட்ட நிறுவனங்கள் மூலம் பல வருடங்களாக செலுத்த தவறியிருந்த தோட்ட நிர்வாக அங்கத்தவ சேம நிதியம் (ESPS) நிலுவைத் தொகை, ஆகரபதன மற்றும் கொடகலை பெருந்தோட்ட உயர் நிர்வாகம் மூலம் தற்போது ஊழியர் நிதிய வைப்பிற்கு செலுத்தி முடித்துள்ளது என பெருந்தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதியத்தின் தலைவர், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இப்பெருந்தோட்ட கம்பனி மூலம் அவ் நிதியத்தினைச் சரியான முறையில் தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதிய வைப்பில் இடுவதனை தாமதித்ததனால் அக் கம்பனியிக் கீழ் தொழிற்படும் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களுக்கு சேம நிதிய வரபிரசாதங்களை இழக்க நேரிட்டது. இது தொடர்பில் தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதியத்தின் தலைவர், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், பரிபாலணத்துடன் கலந்துரையாடி இவ் நிலையினை சுட்டிக்காட்டியதன் பின்னர் உரிய நிலுவைத் தொகையினை சேம நிதிய வைப்பிலிடுவதற்கு ஆகரபதன மற்றும் கொடகலை பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இதனைத் தொடர்ந்து முறையாக மாதாந்த சேமநிதிய தொகையினை செலுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இப் பெருந்தோட்ட நிறுவனங்கள் மூலம் இதுவரை செலுத்த தவறியிருந்த சேம நிதியத் தொகைக்கு அறவிடப்பட வேண்டிய மில்லியன் கணக்கான மேலதிக தொகையினை செலுத்துமாறு தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதிய தொடர்பான பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதுடன் அதனடிப்படையில் அத்தொகையினை பகுதிகளாக செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதியத்தின் தலைவர், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனம் மூலமும் தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதியத்தினை செலுத்த தாமதித்துள்ளதுடன், அது தொடர்பில் தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதியம் மூலம் தனியார் ஊழியர் சேம நிதிய ஆணையாளருக்கு முறையிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்ட நிர்வாக அங்கத்துவ சேம நிதியத்தின் தலைவர்,  இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்கள் இவ் நிலுவைத் தொகையினை செலுத்த தாமதிப்பது தொடர்பில் இவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு உடனடியாக பதிலளித்த தற்போதைய உயர் நிர்வாகம் விரைவாக நிர்வாகத்துடன் கலந்துரையாடி அத் தொகையினை செலுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். 

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org