NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மற்றும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்

இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றும் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களின் சம்பளம் மற்றும் சேவை விதிமுறைகளை தீர்மாணிக்கும் கூட்டு ஒப்பந்தம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பு 10, சிறிதம்ம வீதீ, இல.257 இல் அமைந்துள்ள இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தில் கைச்சாத்திடப்பட்ட இவ் கூட்டு ஒப்பந்தத்திற்கு தோட்ட நிர்வாக அங்கத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னிஆரச்சி, பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ், துணைத்தலைவர் தனுக விஜயகுணரத்ன, உப தலைவர் சென்னன் இளயராஜா ஆகியோரும் ஊழியர் தரப்பில் இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தலைவர் ஸ்ரீமால் விஜேசேகர, பொது முகாமையாளர் எச்.என்.பீ. ஜினசேகர, பிரதி பொது முகாமையாளர் எஸ்.அய்.எம்.ஹசன், நிர்வான மேலாளர் - நிர்வாகம் ஜீ.பீ.சீ.பொன்சேகா ஆகியோர் கூட்டு ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டனர்.  

இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றும் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களுக்கு முதல் வருடத்தில் 25% வீதத்திலும் 2024 ஆம் வருடத்தில் 5% வீதத்திலும் சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வெற்றிக் கொள்ள முடிந்ததெனவும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் கண்டி கிளையின் தலைவர் ரோஹண விஜேரத்ன மற்றும் இல.தோ.சே.ச கண்டி கிளைச் செயலாளர் அனுர விக்ரமரத்ன ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.  

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org