CESU தலைவர்கள் பங்கேற்கும் காலி பிராந்தியத்தின்...
CESU தலைவர்கள் பங்கேற்கும் காலி பிராந்தியத்தின் அங்கத்தவர் சந்திப்பு மார்ச் 16,17 ஆம் திகதிகளில்
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் காலி பிராந்தியத்தின் அங்கத்தவர் சந்திப்புச் செயற்திட்டம் மார்ச் 16 மற்றும் 17 திகதிகளில் நடைமுறைப்படுத்த சங்கம் செயற்பாடுகள் முன்னெடுத்துள்ளது. தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி அவர்களின் பணிக்கூற்றின் படி நடைமுறைப்படுத்தப்படும் இச் செயற்பாட்டில் காலி பிராந்தியத்தின் தோட்டங்களில் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்படும். இதற்காக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி, பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ், துணைத் தலைவர் தனுக விஜயகுணரத்ன மற்றும் சங்கத்தின் காலி கிளையின் தலைவர் சரத் பிரேமலால், செயற்குழு அங்கத்தவர் ரஞ்சித் திலகரத்ன ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
இதனடிப்படையில் மார்ச் 16 ஆம் திகதி எல்பிட்டிய பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான திவிதுர, எல்பிட்டிய, கெடன்தொல, பென்தொட்ட, தல்கஸ்வெவை, லேல்வல மற்றும் குளுகஹாகந்த ஆகிய தோட்டங்களிலும் மார்ச் 17 ஆம் திகதி வட்டவலை பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான ஹோமதொல, நாக்கியாதெனிய, தலங்கஹா தோட்டங்களிலும் நமுணுகுல பெருந்தோட்டத் துறைக்குச் சொந்தமான சிட்ரஸ், வல்பிட்ட, பத்தேகம ஆகிய தோட்டங்களிலும் இக் கூட்டங்கள் நடைபெறும்.