NEWS AND BLOG

Ceylon Estate Staffs' Union (CESU)


CESU - மே தின கொண்டாட்டம் ஹட்டனில்

நூற்றாண்டின் பெருமையுடன்

உரிமைகளுக்காக

ஒன்றிணைவோம் !

நூற்றாண்டின் பெருமையுடன் உரிமைகளுக்காக முன்செல்லல் எனும் தலைப்பின் கீழ் இம்முறை மே தினக் கொண்டாட்டம் ஹட்டனில் நடத்த இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதென சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றிலேயே நூறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள முதலாவது தொழிற்சங்கமான இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் பெருந்தோட்டத் துறையில் சேவையில் ஈடுபடும் தோட்ட நிர்வாக சேவையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமாகும்.

இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் தனியாக மே தினத்தை கொண்டாடிய இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் பின்பு சுயாதீன தொழிற்சங்கங்களுடன் இணைந்து மே தினத்தை கொண்டாடியது.

இம்முறை மே தினத்தை தமது சங்கம் ஆரம்ப காலங்களில் கொண்டாடியதைப் போலவே தனியாக கொண்டாட சங்கத்தின் நிர்வாகக் குழு எடுத்துள்ள தீர்மாணத்திற்கிணங்க நடைபெறுவதாக பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.  

இதனடிப்படையில் மே 01 ஆம் திகதி ஹட்டனில் அமைந்திருக்கும் டீ.கே.டபிள்யூ (D.K.W Reception Hall) விழா மண்டபத்தில் இக் கொண்டாட்டம் நடைப்பெறுவதுடன் மே தின அணிவகுப்பு காலை 9.00 மணிக்கு ஹட்டன் புகையிரதச்சாலை அருகில் ஆரம்பித்து டீ.கே.டபிள்யூ (D.K.W Reception Hall) விழா மண்டபம் வரை பயணிக்க உள்ளது.

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொருளாளர் மாரிமுத்து சுதாகர் மற்றும் உப தலைவர் சென்னன் இளையராஜ் ஆகியோரின் வழி நடத்தலின் கீழ் ஹட்டன் கிளையின் தலைவர் எஸ்.மனோஹரன் மற்றும் திம்புள்ள கிளையின் தலைவர் ஏ.அசோகன், நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் எஸ்.வாமதேவன், எஸ். ஆறுமுகராஜ், எஸ். சந்திரமதன் ஆகியோரின் ஏற்பாட்டுடன் நடைப்பெறும். இம் மே தினக் கொண்டாட்டம் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி அதன் பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் சங்கத்தின் அறங்காவலர் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் அமைந்துள்ள பெருந் தோட்டங்களில் சேவையாற்றும் அங்கத்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

https://www.facebook.com/photo/?fbid=730225982222614&set=a.596474555597758

We call you back

Request a Call

Success! Your message has been sent to us.
Error! There was an error sending your message.

Save your career

Talk to a Specialist

CESU has been playing a leading role in many struggles of the working class and organizations of Civil Societies in Sri Lanka.

+94 112 573 948 info@cesusrilanka.org