நயபெத்த - விஜேந்திரவின் பணி நீக்கம் ரத்து
அகரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான, பண்டாரவளை நயபெத்த தோட்டத்தில் உதவித் தொழிற்சாலை அதிகாரி டன்கன் விஜேந்திர அவர்கள் சேவை விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் மற்றும் கவனயீனமாக செயற்பட்டுள்ளதாகவும் கூறி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்துடன் கலந்துரையாடி அவரின் பணியினை நிறைவு செய்ய நிறுவனத்தின் பொது முகாமையாளர் மூலம் எடுக்கப்பட்ட முடிவினை இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பதுளை கிளையின் தலையீட்டில் மாற்றத்திற்குட்படுத்த முடிந்ததென பதுளை மாவட்ட செயலாளர் ஆர்.பெருமாள் அவர்கள் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் டன்கன் விஜேந்திர அவருக்கு தொடந்து சேவையை வழங்கவும் அவரது கவனயீனம் தொடர்பில் எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை வழங்கவும் பண்டாரவளை நயபெத்த தோட்ட பொது முகாமையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.