களுபோவிடியான தலைவர் வாக்கினை நிறைவேற்றினார்
நிலுவைத் தொகையுடன் 25% சம்பள அதிகரிப்பு
வரையறுக்கப்பட்ட களுபோவிடியான தேயிலைத் தொழிற்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலைத் தொழிற்சாலைகளில் சேவையில் ஈடுபடும் நிர்வாக அங்கத்தவர்களுக்கு நான்கு மாத நிலுவைத் தொகையுடன் 25% சம்பள அதிகரிப்பினை வழங்க அதன் உயர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதென இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் குறிப்பிட்டது.
வரையறுக்கப்பட்ட களுபோவிடியான தேயிலைத் தொழிற்சாலை நிறுவனத்தின் தலைவர் அமிந்த ரொற்றிகோ அவர்களிடம் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் விடுத்த வேண்டுகோளிற்கு இணங்க இச் சம்பள உயர்வினை பெற்றுக் கொள்ள முடிந்தது எனவும் எதிர்வரும் நாட்களில் அந்நிறுவனம் மற்றும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்திற்கிடையில் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களின் ஊதியம் மற்றும் சேவை விதிமுறைகளை தீர்மாணிக்கும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட உள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.
https://www.facebook.com/photo/?fbid=723535459558333&set=a.596474555597758