ஜனவசத்திற்கு எதிரான போராட்டம் பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததினால் மேற்கொண்டதாகும்
பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பிரதான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. ஏன் ம.பெ.அ சபையுடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட தாமதமானது?
இதற்கு முன் பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கைச்சாத்திடும் பிரதான கூட்டு ஒப்பந்தத்தினை அடிப்படையாகக் கொண்டே இதுவரை காலமும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் ம.பெ.அ சபையுடன் கூட்டு ஒப்பந்தத்தினை கைசாத்திட்டது. நாம் முதலாவதாக எமது வேண்டுகோள்கள் அடங்கிய முன்மொழிவுகளை முன்வைத்தோம். வழமையாக இரு தரப்பினரும் கலந்துரையாடி ஒப்புதலுக்குள்ளாகிய பின்பு கைச்சாத்திடுவதே வழக்கமாகும். இம்முறை ம.பெ.அ சபையின் உயர் அதிகாரிகள் இருவர் இதனை ஆய்வு செய்ய வேண்டுமென முன்மொழிவினை வைத்துக் கொண்டு காலம் தாழ்த்துகின்றனர். நாம் சமர்ப்பித்த முன்மொழிவில் அடங்கிய வேண்டுகோள்கள் சிலவற்றிற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்களும் சில விடயங்கள் குறித்து சில இடங்களில் விட்டுக் கொடுத்து செயற்பட்டோம். ஆனால் முதன்மை ஒப்பந்தத்தில் 2024 ஆம் ஆண்டு வழங்குவதாக ஒப்புக்கொண்ட 5% வீத சம்பள உயர்வினை வழங்க முடியாதெனும் தீர்மாணத்திலேயே அவர்கள் உள்ளனர். உண்மையில் 25% மற்றும் 5% வீதம் அல்ல அதற்கும் மேலாக சம்பள உயர்வினை பெற வேண்டிய மோசமான பொருளாதார சூழ்நிலையில் இன்றும் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம்.
இத் தாமதத்திற்கு காரணம் சங்கம் அதிகபட்ச வேண்டுகோள்களை முன்வைத்திருப்பதென ம.பெ.அ சபை கூறுகின்றது?
முன்மொழிவுகள் என்பது என்னவென்பதை முதலாவது புரிந்து செயற்பட வேண்டியதன் அவசியமே இதற்கு காரணமாக எமக்குத் தெரிகின்றது. அதில் அடங்கியுள்ளவைகள் இறுதி ஒப்பந்தத்திற்குள் உட்படுத்த நாம் எதிர்பார்கின்ற விடயங்கள் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். அவைகளை ஒப்பந்தத்திற்குள் உள்ளடக்குவது இரு தரப்பினரும் கலந்துரையாடி ஒப்புதலுக்குள்ளான பிறகு. ஒப்புதலுக்குள் வரும் விதம் குறித்த அடிப்படை விடயங்களை அறிந்திராத போது இவ்வகையான கதைகளை கேட்கக் கூடியதாகவிருக்கும். ம.பெ.அ சபை, சங்கத்திடம் கோரி இருக்கும் விபரங்களை சங்கம் வழங்காததன் காரணமாகவே இவ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட தாமதமாகின்றது எனவும் அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். நாம் தேவையான அனைத்து விபரங்களையும் ஆவணங்களையும் கையளித்துள்ளோம். ஒப்பந்தத்தினை வடிவமைக்க முன்பாக வழங்கும் முன்மொழிவுகள் அதன் முதன்மையான எழுத்தாவணம் ஆகியவை. அதுபோல அவை பற்றின தேவையான விளக்கங்களும் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தோட்ட நிர்வாக அங்கத்தவர்களுக்கு சாதகமாக நியாயம் கிடைக்கும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதனை தடுக்க இரு அதிகாரிகள் அதனுள் செயற்படுவதாக எமக்கு தெளிவாக தெரிகின்றது. இப்பொழுது அதில் ஒருவர் வீட்டில். அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு சென்று எமது விதிமுறைகளை ஏற்று ஒப்பந்தத்திற்கு கைசாத்திட்டமைக்கு அவர்களுக்கு முறைபாடுகள் தெரிவித்துள்ளனர். முறையற்ற தலையீடுகளே இங்கு அதிகம் காணப்படுகின்றது. ம.பெ.அ சபையின் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களுக்கு வழங்கும் வருடாந்த சம்பள உயர்வினை மீண்டும் வசூல் செய்யவும் அவ் வருடாந்த சம்பள உயர்வினை வழங்காதிருக்கும் ஒரு முறை இவ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டனர். எமது பொதுச் செயலாளர் சகோதரர் அவர்கள் அவ் நியாயமற்ற செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இத் திட்டத்தினை தோல்வியடையச் செய்தார். அவர்கள் அவ்விடயத்தினை பரிவுடன் கருத்திற் கொண்டு அதனை மீள வசூல் செய்யாதிருப்பதாகவும் தொடர்ந்தும் வருடாந்த சம்பள உயர்வினை வழங்குவதாகவும் அறிவித்து பதில் அனுப்பினர். அதற்கு எமது சங்கம் கடுமையான பதிலளித்தது. இவ் 5% வீத சம்பள உயர்வு கோரிக்கைக்கு தடைவிதிப்பது அதனால் பாதிப்புற்றோர் ஆகும். நாம் அசாதாரணமான முறையில் 5% வீத சம்பள உயர்வு தரும் படி கோரவில்லை. வாழ்வாதாரத்திற்கு ஏற்ற சம்பள உயர்வினை வழங்குமாறு கோருகின்றோம்.
ம.பெ.அ சபை நிதி நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர். இவ்வகையான சூழ்நிலையில் இவ்வகை வேண்டுகோள்கள் நியாயமானதா?
முன்னைய நிர்வாகத்தின் கீழே ம.பெ.அ சபை நிதி நெருக்கடிகளை சந்தித்தது. அதனை நாம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது காணக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்போதைய புதிய தலைவர் வந்ததன் பின்னர் அச்சூழ்நிலைகளை மாற்றியமைத்துள்ளதாக கூறுகின்றனர். ஒருசில வழிமுறைகளினூடாக அச் சூழ்நிலையில் இருந்து வெளிவர செயற்பாடுகள் மேற்கொள்வதாக அவர் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குறிப்பிடுவதனை காணக்கூடியதாக இருந்தது. எமக்கு 25% வீத சம்பள உயர்வினை வழங்க அவர்கள் ஒப்புக் கொண்டது தற்போதை புதிய சூழ்நிலையின் அடிப்படையிலாகும். அதுபோல அவர் அநீதியாக அல்ல ஒப்பந்தத்திற்கு அமைவாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ் 25% வீதம் வழங்கப்பட வேண்டியது 2024 ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆகும், அதாவது இன்னும் 16 மாதங்கள் மீதம் உள்ளன. ஏன் இப்போதே எதிர்ப்பினை தெரிவிக்கின்றீர்கள்?
தற்போதும் இவ் ஒப்பந்தத்தினை கைச்சாத்திட ஏழு மாதங்கள் தாமதமாகியுள்ளது. ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுவது மற்றும் அவ் ஒப்பந்தத்திற்குள் இவ்விடயத்தினை உள்ளடக்குவதுமே எமது போராட்டத்தின் நோக்கமாக அமைந்தது. 2024 ஒக்டோபர் மாதம் தொடக்கம் 5% வீத சம்பள உயர்வு வழங்க வேண்டியுள்ளதென்பதை நாம் அறிவோம். அதனை ஒப்பந்தத்திற்குள் உள்ளடக்கி அதனை கைசாத்திடவே எமக்கு வேண்டியதாக உள்ளது. ஏனைய ஒப்பந்தங்களில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் போது இது குறித்து சுட்டிக்காட்டியுள்ளோம். பேச்சுவார்தைகள் மேற்கொண்ட வேளை ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில் கிடைக்காமையினால் இவ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்றபட்டது.
இவ் சம்பள உயர்வினை வழங்குவதனால் ம.பெ.அ. சபையின் உயர் நிர்வாக தரம் வகிப்பவர்களின் சம்பளத்தில் மாற்றங்கள் ஏற்படும் என ம.பெ.அ. சபையின் பொது முகாமையாளர் குறிப்பிடுகிறார்?
பெருந்தோட்டத் துறையில் ஊழியர்களுக்கு, நிர்வாகமற்ற ஊழியர்களுக்கு மற்றும் உயர் தர நிர்வாக ஊழியர்களுக்கு வெவ்வேறான சம்பள வரையறைகள் காணப்படுகின்றன. உயர் தர நிர்வாக அங்கத்தவர்களின் சம்பளத்தில் மாற்றங்கள் நடைபெறும் அதனால் எமக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சம்பள உயர்வினை தர மறுப்பது முட்டால்தனமாகும். முதற் தடவையாக ம.பெ.அ. சபையின் அலுவலகத்தில் பணிப்புரிபவர்களின் சம்பளத்துடன் இதனை ஒப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வேறே சம்பள வரையறைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு அரசாங்கம் மூலம் அதிகரிக்கும் சம்பளம் உரித்தாகும். அப்போது நாங்கள் எங்களுக்கும் இவ் சம்பள உயர்வினை வழங்குமாறு கேட்பதில்லை. தோட்ட நிர்வாக அங்கத்தவர்களுக்கு கிடைக்காத பல சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கின்றன. இவ் மாயமான ஒப்பிடுதல் பலனற்றதாகும். எமது மக்கள் பல வருடங்களாக சேவையாற்றி கிடைத்த சம்பளமே தற்போதும் கிடைகின்றது. உண்மையில் தற்போதைய பொருளாதர சூழ்நிலைக்கு அச்; சம்பளம் எவ்வகையிலும் போதாது. அவர்கள் கூறுவது போன்று தலைவர், உப தலைவர், பொது முகாமையாளர், தோட்ட அதிகாரி மற்றும் உப தோட்ட அதிகாரி, தலைமை அலுவலக நிர்வாகிகள் ஆகிய தரங்களின் சம்பளம் வீழ்ச்சியடைந்தால் செய்ய வேண்டியது எமக்கு கிடைக்க வேண்டியவைகளை தடுப்பதல்ல அவர்களுக்கும் அதிகரித்து கொடுப்பதாகும். பழமையான பழமொழி ஒன்று உள்ளது காற் செறுப்பின் அளவிற்கு காலை வெட்டாமல் காலிற்கு பொறுத்தமான செறுப்பினை வாங்க வேண்டுமென. அதைதான் இவ் விடயம் குறித்து எமக்கு கூற இருக்கின்றது.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் பெருந்தோட்டத் துறை இராஜாங்க அமைச்சர் அவர்களை சந்தித்து ம.பெ.அ. சபையுடனான ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடுகையில் இவ் வேண்டுகோள் அமைச்சர் அவர்களின் அதிருப்திக்கு உட்பட்டதாக ம.பெ.அ. சபையின் பொது முகாமையாளர் குறிப்பிடுகின்றார். இது உண்மையா?
ஒருபோதும் அப்படி ஒரு விடயமும் நடக்கவில்லை. பெருந்தோட்டத் துறையின் விடய அமைச்சர்களுடன் எமது சங்கம் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பினை பேணி வருகின்றது. ஏனென்றால் இத் துறையின் வளர்ச்சிக்காக சேவையாற்றும் தரப்பினர் என்ற வகையில் இவ்வகை தொடர்புகளை பேண வேண்டியுள்ளது. இலங்கையில் நூறு வருடங்களை நிறைவு செய்த பெருமையுடன் நூற்றாண்டினை கொண்டாடிய சங்கம் எமதாகும். அந்நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தந்தவரும் தற்போதைய விடய பொறுப்பான பெருந்தோட்டத் துறை அமைச்சர் அவர்களே. கடந்த தினத்தில் அமைச்சர் அவர்களை நாம் சந்தித்தது எமது அங்கத்தவர்கள் முகங் கொடுக்கும் சில விடயங்களை முன்வைக்கவாகும். அதன் போது ம.பெ.அ. சபையுடனான ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடினோம். மிகவும் கவனமாக எமக்கு செவிமடுத்த அமைச்சர் அவர்கள் எம்முன்னால் ம.பெ.அ. சபையின் தலைவர் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து இது தொடர்பில் மீண்டும் ஒரு முறை கலந்துரையாடி தீர்வினை வழங்குமாறு அறிவுரை வழங்கினார்.
தங்களது சங்கத்தின் அங்கத்தவர்கள் பெரும்பாலானோருக்கு வாழ்வாதார வழியினை வழங்கும் ம.பெ.அ. சபைக்கு எதிராக இவ்வகையில் செயற்படுவது நியாயமானதா?
நாங்கள் சுயாதீPன தொழிற்சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். எமது அங்கத்துவர்களின் சம்பளம், சேவை விதிமுறைகளுக்காக போராடுவது மற்றும் அவர்களுக்கு சிறந்த வாழ்வாதார சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது முதற் கடமையாகும். கடந்த தினங்களில் ம.பெ.அ. சபை தோட்டங்களில் அங்கத்தவர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் அவர்கள் வாழும் அவல வாழ்க்கையை நாம் கண்டோம். கடினமான இடங்களில், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அவர்கள் செய்யும் அர்பணிப்பு போற்றத்தக்கது. அவ்வகைச் சூழலில் இவ் 5% வீத சம்பள உயர்வினை வழங்க முடியாதென்பது நியாயமானதா? இதனை விட அதிகளவில் சம்பள உயர்வினை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துவதே சரியான செயலாகும். உயர் நிர்வாகம் கலந்துரையாடல் மூலம் தீர்வினை பெற்றுத்தர ஆயத்தமில்லாத போது தொழிற்சங்கம் என்ற ரீதியில் எம் அங்கத்தவர்களுக்கு உரிய சலுகைகளை பெற்றுக் கொள்ள நாம் வேறு என்ன முறையை கைகொள்வது.
கேகாலை, மஸ்கெலிய மற்றும் நமுணுகுல பெருந்தோட்டக் நிறுவனங்கள் இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாததினைக் குறித்து அமைதியாகவிருந்து ஏன் ம.பெ.அ. சபைக்கு எதிராக அங்கத்தவர்களை வழிநடத்துகின்றீர்கள்?
ம.பெ.அ. சபையின் பொது முகாமையாளர் தோட்ட அதிகாரிகள் ஊடாக எமது அங்கத்தவர்களுக்கு வழங்கியுள்ள கடிதம் ஒன்றில் இவ்விடயம் எழுதப்பட்டுள்ளது. அவர் அதைக் குறித்து அறிந்துள்ள அளவு அவ்வளவு தான். ஊழியர் சம்மேலனத்துடன் எமது சங்கம் கைச்சாத்திடும் இவ் கூட்டு ஒப்பந்தம் எமது நாட்டின் கூட்டு ஒப்பந்த வரலாற்றில் பழமையானதொன்றாகும். இது தொழிற்துறை தகராறு தொடர்பான சட்ட ஒழுங்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தமாகும். அதிலிருந்து வெளியேற யாராலும் முடியாது. இவ் நிறுவனங்கள் ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திடாவிட்டாலும் அவ் நிறுவனங்கள் தோட்ட நிர்வாக அங்கத்தவர்களுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட சம்பள உயர்வினை வழங்குகின்றது. ஆனால் அதனைப் பெற்றுக் கொடுக்கும் முறை தொடர்பில் பிரச்சினை ஒன்று உள்ளது. இது தொடர்பில் தொழிற்துறை ஆணையாளர் ஜனரால் அவர்களுக்கு சங்கம் அளித்த புகாரினைத் தொடர்;ந்து தொழிற்துறை ஆணையாளர் மூலம் ஒப்பந்தத்தின் மூலம் அதிகரித்த சம்பள உயர்வினை மாதாந்த சம்பளத்துடன் இணைத்து வழங்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதிமன்ற வழக்கு தொடர்வதால் மேலதிகமாகப் பேச விரும்பவில்லை.
இது தொடர்பில் சங்கத்தின் முன் நடவடிக்கைகள் எவ்வாறானது?
இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் எமது அங்கத்தவர்களுக்கு அறிவிப்போம். ம.பெ.அ. சபையின் தலைவருடன் நடத்திய கலந்துரையாடலின் பின்பதாக நாம் எமது போராட்டத்தினை தற்காலிகமாக இடை நிறுத்தினோம். இவ்விடயம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். எமது நியாயமான வேண்டுகோளிற்கு கவனம் செலுத்தி இப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தீர்வினை பெற்றுத் தருவாரென நாம் நம்புகின்றோம். அப்படி இல்லாவிட்டால் கடும் போராட்டத்தை மேற்கொள்ள சங்கம் பின்னடைவதில்லை.
கலந்துரையாடலை மேற்கொண்டது
ரோஹண சமன்தென்ன