தொழிலாளர் சட்டத்திற்கு கை வைக்க வேண்டாம் !
தொழிலாளர் சட்டத்திற்கு கை வைக்க வேண்டாம் !
எதிர்ப்பு போராட்டத்திற்கு இலதோசேச இணைந்தது
தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் படி தொழிலாளர் சட்டங்களுக்கு மற்றும் EPF / ETF இற்கு கைவைக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கு வலியுறுத்தி பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் 25.07.2023 ஆம் திகதியன்று நடைப்பெற்றது.
ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் எதிர்ப்பு போராட்டத்திற்கு இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் நிஷாந்த வன்னிஆராச்சி, பொதுச் செயலாளர் ரொபர்ட் பிரென்சிஸ், துணைத்தலைவர் தனுக விஜயகுணரத்ன ஆகியோர் மற்றும் பெருந்தோட்ட துறை சம்பந்தமாக கொழும்பு மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் சில தோட்டங்களில் இருந்தும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்க அங்கத்தவர்கள் அநேகர் கலந்துக் கொண்டனர்.
https://www.facebook.com/photo?fbid=793561095889102&set=a.596474555597758